புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

ஆட்கடத்தல்கள் தொடர்பில் புதிய அறிக்கை

பலவந்தமான முறையில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பில் புதிய அறிக்கையொன்றை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் என்ற தன்னார்வ
தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் ராஜதந்திரிகளுக்கு இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் அதிகாரிகளிடம் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.


காணாமல் போனவர்களின் குடும்பங்களது நலனை உறுதி செய்வதே இந்த அறிக்கையின் நோக்கம் என நிலையத்தின் தலைவர் டொக்டர் மகேசன் கணேசன் தெரிவித்துள்ளார். பாதிப்புக்கள் மற்றும் அதற்கான தீர்வுப் பரிந்துரைகளையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ad

ad