புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2015

ஐ.நா. சபையில் பொதுவிவாதம்: இலங்கை மீது மனித உரிமை ஆணையர் குற்றச்சாட்டு


இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

இலங்கை போர்க்குற்றங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மீது ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின்போது, பொதுவிவாதம் தொடங்கியுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் தமது அறிக்கை பற்றிய விளக்கத்தை அளித்தார். இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை அவசியம் என்று கூறினார்.

முந்தைய ராஜபக்சே அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆன பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவில்லை. தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைதானவர்களின் விவரங்களை இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்லை. தடுப்பு சட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்று விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையர் சைய்த் ராத் அல் இலங்கை மீது குற்றம் சாட்டினார்.

மேலும், தீவிரவாத தடுப்பு சட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என புதிய அரசு அறிவித்திருப்பது, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விவாதத்தில் பங்கேற்ற பன்னாட்டு பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ad

ad