புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2015

https://www.facebook.com/eelamranjanvot/videos/10156156864145637/
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்ட தீர்மானம்,
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தனி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இதனை இந்திய அரசு ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று ஏற்கனவே அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது.
இந்த விடயத்தில் இந்தியா ஐ.நாவுக்கு, நெருக்கடி கொடுத்து, சர்வதேச விசாரணைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும். ஒரு லட்சியத்தை பெறுவதற்கு, எத்தைகய தியாகத்தையும் செய்ய வேண்டும் என்றும் நினைப்பது சாதாரணம் என்று கூறிய, பேரறிஞர் அண்ணா அமுத மொழிக்கு ஏற்ப, தமிழகத்தின் லட்சியத்துக்கும், இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்திற்கு ஏற்பவும், இலங்கை போரின்போது சர்வதேச சட்டம், ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி, போர்குற்றங்கள் நடத்திய அனைவர் மீதும், சர்வதேச விசாரணை நடத்த இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும்.
அமெரிக்கா, இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது தெரிந்தால், இந்தியா, ராஜதந்திர ரீதியில் அமெரிக்காவை தன்பக்கம் இழுத்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று, இந்திய பேரரசை, தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது. என்னால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது, பிற உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி தர உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.

ad

ad