புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

'விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி!' - பரபரப்பு தகவல்!

  நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் உள்பட ரூ. 100  கோடிக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பல நடிகர், நடிகைகள் சொத்துக்களை ஏராளமாக வாங்கிக் குவித்ததாக
வருமான வரித்துறைக்கு தகவல்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து   பிரபலமான நடிகர், நடிகைகளில் வருமான வரிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் கோடிக்கணக்கான வருமான வரிபாக்கி இருந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, விஜய்யின் மேலாளர் மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், பைனான்சியர்கள் அன்பு, ரமேஷ் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர். 

சென்னையில் நடிகர் விஜய்க்கு சொந்தமான நீலாங்கரை வீடு, அவரின்  உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மேலும் மதுரை, கன்னியாகுமரி, கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. நடிகைகள் நயன்தாராவுக்கு சொந்தமான திருவனந்தபுரம் வீடுகள், சொத்துக்கள், சமந்தாவுக்கு சொந்தமான பல்லாவரம் வீடு மற்றும் சொத்துக்கள், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் செல்வக்குமார், சிபு தமீன், மதுரை திரைப்பட பைனான்சியர் அன்பு மற்றும் ரமேஷ்  ஆகியோரின் வீடுகளிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில், " வருமான வரி ஏய்ப்பு செயல்களில் நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளது குறித்து எங்களுக்குத்  தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த சோதனையில் ரூ. 2 கோடி ரொக்கப்பணம், ரூ. 2 கோடி மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புலி படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிப்பதில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்துள்ளனர். எங்களுக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் தோராயமாக பார்த்தால் சுமார் ரூ. 100 கோடி வரை கணக்கில் காட்டப்படாத சொத்துகள் நடிகர், நடிகைகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் சிக்கியுள்ளன" என்று தெரிவித்தனர். 

ad

ad