புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2015

ராஜபக்சர்களினால் கடலுக்கடியில் பணம் நிரப்பப்பட்ட 11 கொள்கலன்கள் மறைப்பு?


கடந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி காலத்தினுள் பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட கிட்டத்தட்ட 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராய்ந்த குழு சந்தேகிக்கின்றது.
 
மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகளுக்கிடையில் இது தொடர்பில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச ஆட்சியின் போது திருடப்பட்ட பெரிய அளவிலான பணத்திற்கு என்ன நடந்ததென்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.
எப்படியிருப்பினும் இதுவரையில் சேகரித்துள்ள தகவல்களுக்கமைய கிட்டத்தட்ட 10 அமெரிக்க டொலர் பில்லியன் நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்டுச் சொல்வதானால் 2013ஆம் ஆண்டும் 5.31 டொலர் பில்லியன் ராஜபக்ச மற்றும் அக் குடும்ப உறுப்பினர்களினால் திருடப்பட்டுள்ளதாகவும், குறித்த பணம் இந் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ad

ad