புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2015

15 நிமிடங்களில் நெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு குறிகட்டுவானை அடைய முடியும்.நெடுந்தீவுக்கான நோயாளர் காவுபடகு, ஜனாதிபதியினால் வடக்கு சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு


இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதி மக்களின் பாவனைக்காக நோயாளர் காவுபடகு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர்.ப.சத்தியலிங்கத்திடம் கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சரின் ஊடகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடற்படையினால் கட்டப்பட்ட இந்த நோயாளர் காவுபடகானது அதிவேக டோரா வகையைச் சார்ந்தது.
47 அடி நீளமான இந்த படகில் 15 நோயளர்களை ஒரே தடவையில் எடுத்துச் செல்ல முடியும், நான்கு பேருக்கான நோயாளர் கட்டில் வசதிகளுடன் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் 15 நிமிடங்களில் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவானை அடைய முடியும்.
அண்மையில் வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த சுகாதார அமைச்சர் அவர்கள் நெடுந்தீவுப் பகுதி மக்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வருவதற்கு பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்ததுடன் இதற்காக மாகாண சுகாதார அமைச்சினால் விலை மனு கோரப்பட்டுள்ள போதும் இதற்காக ரூ 75 மில்லியன் தேவைப்படுவதாகவும் அதற்கான நிதி மாகாண சுகாதார அமைச்சிடம் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆளுனரின் வேண்டுகோளிற்கமைய இலங்கை கடற்படையால் இந்த விசேட நோயளர் காவுபடகு ரூ 38 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியின் இன்றைய கிளிநொச்சி வருகையையிட்டு கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியினால் நோயாளர் காவுபடகு மாகாண சுகாதார அமைச்சரிடம் உத்தியோகபூர்வாமாக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவிபாதுகாப்பு அமைச்சர், மாகாண ஆளுனர் பளிககார, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஆளுனரின் செயலாளர், கடற்படை தளபதி, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்மூலம் தீவுப் பகுதியிலுள்ள நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக இலகுவாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரமுடியுமெனவும் நீண்டகாலமாக தீவுப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினை தீர்;க்கப்படவுள்ளதாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad