புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2015

1990 இல் புதைத்த தங்க நகையை 2015 இல் மீட்டார் பெண், யாழில் சம்பவம்

வலி வடக்குப் பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு தனது சொந்தக் காணியில் பாதுகாப்புக்  கருதி புதைத்து வைத்த பெண்ணொருவரே கடந்த வியாழக்கிழமை
அவற்றை மீட்டெடுத்தார்.  இது குறித்து அவர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த வேளை  வறுத்தலைவிளான் பகுதியில் இருந்து தனது தாயாருடன் இடம் பெயரும் போது பாதுகாப்புக் கருதி ஒரு தொகுதி தங்க நகைகளை தமது வீட்டு வளவின் ஓர் இடத்தில் புதைத்து வைத்து விட்டு வந்துள்ளார். இவர்கள் இடம்பெயர்ந்து உரும்பிராய் பகுதியில் வசித்து வந்தனர். குறித்த யுவதியின் தாயாரும் காலமாகி விட்ட நிலையில் இவர் திருமணமாகிப் பிள்ளைகளுடன் வாழ்கின்றார். 
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கருக்கு அருகில் உள்ள வேலியோரமே அவர்களது காணி அமைந்துள்ளது. இது தொடர்பில் அப்பெண் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். இதற்கமைய அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாகக் பெண்ணின் குடும்பத்தால் கடந்த 25ஆண்டுகளுக்கு முன்னர்  புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

ad

ad