புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள்
போட்டிகளிலும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடிவருகின்றது.
காலி சர்வதேச அரங்கில் இடம்பெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான சோபஸ் - திஸேரா கிண்ணத்திற்கான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் மோதிய  2 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 200 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை சார்பாக மிலிந்த சிறிவர்த்தன அதிகபட்சமாக 68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். மேற்கிந்திய தீவுகளின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜோமல் வெர்கன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை அணியின் தமிங்க பிரசாத் மற்றும் டில்ருவான் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது, 163 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
தொடக்க வீரர் பிராத்வெய்ட் 47 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் தமிக்க பிரசாத் 4 விக்கெட்டுகளையும்  டில்ருவான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் 37 ஓட்டங்களால் முன்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 206 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
அணித்தலைவர்  மெத்தியூஸ் (46), சிறிவர்த்தன (42) ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் சார்பில் பந்துவீச்சில் பிராத்வெய்ட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 244 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
3 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டுக்கு 20 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்றைய 4 ஆவது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.  இன்று தொடங்கிய இறுதி நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி ஹேராத்  மற்றும் சிறிவர்த்தன  ஆகியோரின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாத நிலையில் 65.5 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் ஹேராத் 4 விக்கெட்டுகளையும் சிறிவர்த்தன 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனால் இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக அறிமுக வீரர் சிறிவர்த்தனவும் தொடர் ஆட்டநாயகனாக ஹேரத்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

ad

ad