புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2015

214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது


தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் கான்பூரில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 3–வது ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றன. 

இந்திய அணி இந்தூரில் நடந்த 2வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 4வது ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2–2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதனால் கோப்பை யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. முதலில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது.

இதில் தென் ஆப்பிரிக்கா 438 ரன்கள் எடுத்தது. மும்பை வான்கடே மைதானத்தில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். அதிகபட்சமாக டு பிளஸிஸ் 133 ரன்களும், டி வில்லியர்ஜ் 119 ரன்களும் குவித்தனர். இதையடுத்து இந்தியாவுக்கு 439 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதில் தென் ஆப்பிரிக்கா 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3–2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. 

35.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இந்திய அணி 224 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது

ad

ad