புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2015

பந்துவீச்சு அபாரம்: இந்தியாவுக்கு 270 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா - தென் ஆப்பிரிகா இடையிலான ம் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 270 ஓட்டங்களை எடுத்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்க அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மில்லர் - டி காக் ஜோடி இந்தியப் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டது.
72 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மில்லர் 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆம்லாவும் 5 ஓட்டங்களுடன் வீழ்ந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த டி காக் - ப்ளெஸ்ஸி ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சீரான வேகத்தில் ரன்கள் சேர, ஒரு முனையில் பெள்ஸ்ஸி அரை சதமும், மறு முனையில் டி காக் சதத்தையும் கடந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 200 ஓட்டங்களை கடந்தது.
39-வது ஓவரில் மொஹித் சர்மா வீசிய பந்தை, டிவில்லியர்ஸ் போல பேட்டை வளைத்து பின்னால் அடிக்க முயன்ற ப்ளெஸ்ஸி, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதுவரை ஏறுமுகமாக இருந்த தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் இதற்குப் பிறகு சற்றே தடுமாறியது.
அடுத்த ஓவரில் டி காக் 103 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரில் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் அக்ஸர் படேலின் சுழலுக்கு பெவிலியன் திரும்பினார்.
இதற்குப் பிறகு வந்த டுமினியும், பெஹார்டைனும் அதிரடி ஆட்டம் ஆடாமல் பொறுமையை கடைபிடித்தனர்.
கடைசி இரண்டு ஓவர்களில் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டமாக இருந்தது.
முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை தென் ஆப்பிரிக்கா எடுத்தது.
இந்தியா தரப்பில் அக்சர் படேல், ஹர்பஜன், மிஷ்ரா என சுழற்பந்து வீச்சாளர்கள் மூவருமே கட்டுப்பாடான பந்துவீச்சில் அசத்தினர்.
தற்போது 271 ஓட்டங்கள் இலக்குடன் இந்தியா துடுப்பெடுத்தாடி வருகிறது.

ad

ad