புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2015

அஞ்சல் தினப்போட்டிகளில் வடமாகாணம் 2ஆம் நிலை

141 ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் தேசிய சேமிப்பு வங்கியின் கொடுக்கல் வாங்கல்களில் அகில இலங்கை ரீதியில்
மாகாண மட்டத்தில் வடமாகாணம் இரண்டாம் நிலையில் உள்ளது. அத்துடன் மாவட்ட மட்டத்தில் யாழ். மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் பிரிவும் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி பத்திரமுல்லையில் இடம் பெற்ற உலக அஞ்சல் தினநிகழ்வின்போது இதற்கான வெற்றிக்குரிய விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன.தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் அப்துல் ஹலீம் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றிச் சின்னங்கள், விருதுகள் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தார்.
தேசிய சேமிப்பு வங்கி கொடுக்கல் வாங்கலில் மாகாண ரீதியில் இரண்டாம் இடத்தை வடமாகாணம் பெற்றதால் அதற்கான விருது வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் இரட்ண சிங்கத்திடம் வழங்கப்பட்டது.அத்துடன் மாவட்டரீதியில் யாழ்.மாவட்டம் இரண்டாம் நிலையில் உள்ளதால் அதற்கான வெற்றிக் கேடயம் யாழ்.மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் கே.புஸ்பநாதனிடம் வழங்கப்பட்டது.
அதனைவிட இந்தக்கொடுக்கல் வாங்கல்  அகில இலங்கை ரீதியில்  உபஅஞ்சலகங்கள் மட்டத்தில் வேலணை சோளவத்தை உபஅஞ்சலகம் முதலிடத்தில் உள்ளது. மற்றும் தபாலக மட்டத்தில் வேலணை அஞ்சலகம் இரண்டாம் நிலையிலும், பண்டத்தரிப்பு தபாலகம் மூன்றாம் நிலையிலும் உள்ளன.அத்துடன் மொபிற்றல் பற்றுச் சீட்டுக்கான பணம் சேகரிப்பில் பலாலி இராணுவ முகாம் தபாலகம் இரண்டாம் நிலையில்  உள்ளது. அதனைவிட வெஸ்ரன் யூனியன் பணப்பரிமாற்றச் சேவையில் யாழ்.அஞ்சலகம் ஐந்தாம் நிலையில் உள்ளது.
அத்துடன் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் தர உத்தியோகத்தருக்கான யாழ்.தபாலக பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த பா.ராகுலன் தெரிவானார்.அதனைவிட சிறந்த சாரதியாக யாழ்.அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக சாரதியான க.இரவிச் சந்திரனும் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன.
அகில இலங்கை ரீதியாக சிறந்த அஞ்சலராக புதுக் குடியிருப்பு தபாலக அஞ்சலகர் பி.எம்.அரிய குமாரும் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன.இந்தத் தேசிய மட்டத்திலான உலக அஞ்சல் தின நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற தபா லகப் பணியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் தபால்மா அதிபர் மற்றும் நாட்டில் உள்ள  சகலதர  தபால் அதிகாரிகள், பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

ad

ad