புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2015

போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மை: பரணகம ஆணைக்குழு அறிக்கை


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மையானது என்று மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதில் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காணொளி தொடர்பில் முறையான நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் நீதிபதியொருவர் தலைமையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக்க கட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் மன்னிக்கமுடியாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளமை தெளிவாகத் தெரியவந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையொன்றுக்கும் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.
இலங்கையின்போர்க்குற்றங்கள் உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அது தொடர்பில் உள்நாட்டு விசாரணைகோரும் முதலாவது அறிக்கையாக இதனைக் கொள்ள முடியும்.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நியமித்த ஆணைக்குழுக்களே ஜெனீவாவின் தற்போதைய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை குறித்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆணைக்குழுக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தமது விசாரணையை முடித்திருந்த நிலையில் இவற்றின் அறிக்கைகள் அண்மையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

ad

ad