புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

மீரியாபெத்தை மக்களுக்கு 4 மாதங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் : திகாம்பரம்

எனது அமைச்சுக்கு அதிகாரம் வழங்கும் பட்சத்தில் மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்கு மாதங்களுக்குள் வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேரூந்து நிலைய திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் எமது அமைச்சினாலேயே நாட்டப்பட்டது. இந்த பணி பின்னர் இடர் முகாமைத்துவ அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த வீடுகளை அமைக்கும் அதிகாரம் மீண்டும் எமது அமைச்சிற்கு வழங்கும் நிலையில், நான்கு மாதங்களில் அங்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

எனது அமைச்சின் ஊடாக ஒரு வீட்டுக்கு 12 இலட்சம் ரூபாய் செலவு செய்து 400 வீடுகள் அமைத்து புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இப்பொழுது தலவாக்கலை மக்களுக்கு வரப்பிரசாதமாக கிடைக்கப்பட்டு இருக்கின்ற இந்த பஸ் தரிப்பு நிலையத்தை எங்களுடைய பஸ் தரிப்பு நிலையம் என நினைத்து சுத்தம் பேணி பாதுகாக்க ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என்றார்.

ad

ad