புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

நாமலின் 6 நிறுவனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்


சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கும் மில்லியன் கணக்கிலான பணத்தை வர்த்தகங்களுக்கு பயன்படுத்தி நிதி சந்தையில் இணைத்துகொள்ளும் கடத்தல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஈடுபடுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அவரின் உரிமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்ற 6 நிறுவனங்கள் இக் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
“கவர்ஸ் கோப்பரேட் சர்விஸ்”, “கவர்ஸ் சொலுஷன்”, கவஸ் செகடேரியட்” “என்.ஆர்.கன்ஸல்டன்”, “ஹெலோகோப்” மற்றும் சிலோன் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களே இவ்வாறான கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் மாதாந்த சம்பளம் பெறும் நாமல் ராஜபக்ச இந் நிறுவனங்கள் ஊடாக பல மில்லியன் கணக்கிலான கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்வதாக எழும்பிய சந்தேகத்தின் பேரில் இவ் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் இதன் போது கறுப்பு பணம் வெள்ளை பணமாக மாற்றும் வியாபாரம் ஒன்று தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத் தகவல்களுக்கு இடையில் 2012ஆம் ஆண்டு கவர்ஸ் கோப்ரேட் சேவிஸ் நிறுவனத்தினால் ஹெலோ கோப் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்காக 125 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது,
தனக்கு சொந்தமான என்.ஆர்.கன்ஸல்டன் சட்ட நிறுவனத்தை வங்காளதேசத் தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்து 50 மில்லியன் பணம் பெற்றுகொண்டதாகவும், அப் பணத்தில் அந் நிறுவனத்தை பெற்றுகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வங்காளதேசத் தொழிலதிபர் அல்லது அவரது பணம் இந் நாட்டிற்கு எவ்வாறு வந்ததென்று இது வரையிலும் தகவல் வெளியாகவில்லை.
கவர் கோபரேட் நிறுவனத்தின் 2013-14ஆம் ஆண்டு காலப்பகுதியின் வருமானம் 81 மில்லியனாகும்.
எனினும் குறித்த நிறுவனம் ஆரம்பிக்கையில் 10 ரூபாய் பகுதிகள் 100 மாத்திரமே காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இவ் 6 நிறுவனங்களுக்கு பணம் கிடைத்த முறை தொடர்பிலும் பணம் சம்பாதித்த முறை தொடர்பிலும் தகவல் வெளியிடுவதற்கு நாமல் ராஜபக்ச முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad