புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

மண்ணுக்காக வாழ்ந்து மண்ணுடன் சங்கமமான மதிப்பிற்குரிய மாசற்ர போராளி டேவிட் ஐயா!

மண்ணுக்காக வாழ்ந்து மண்ணுடன் சங்கமமான எமது மதிப்பிற்குரிய மாசற்ர போராளி டேவிட் ஐயா!
Thampi Mu Thambirajah இன் புகைப்படம்.
Thampi Mu Thambirajah இன் புகைப்படம்.இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
காந்தீய அமைப்பின் தலைவர் சொலமன் அருளானந்தம் (டேவிட் ஜயா) அவர்களின் இறுதி
நிகழ்வுகள் இன்று புதன் கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கு முன்பாக ஆனந்தபுரத்தில் அவரின் வசிப்பிடத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் காந்தீய அமைப்புகளின் பிரநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ் மக்களின் நலனுக்காக உண்மைதன்மையுடன் பணியாற்றி ஒரு மனிதர் டேவிட் ஜயா இவர் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது பாதிக்கப்பட்டு தென்னிலங்கையில் இருந்து வந்த மக்களை வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் மற்றும் கிழக்கு மாகாண மாவட்டங்களில் குடியேற்றுவதற்காக காந்தீய அமைப்பினை உருவாக்கி உழைத்தவர். 500 க்கு மேற்பட்ட முன்பள்ளிகளை காந்தீய அமைப்பின் மூலம் ஆரம்பித்து செயற்படுத்தி வந்தவர். இப்படி பல பணிகளை மேற்கொண்டவர் டேவிட் ஜயா அவர்கள்.
இவரின் பூதவுடல் இன்று மதியம் 1 மணிக்கு ஆனந்தபுரத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கிளிநொச்சி புனித திரேசம்மாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருநகர் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ad

ad