புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2015

இரு பிரிவிலும் கிண்ணங்களை தனதாக்கியது கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம்.

மாதனை விளையாட்டுக்கழகம் 5 பந்துப்பரிமாற்றங்கள், 10 பந்துப்பரிமாற்றங்கள் என இருபிரிவாக நடத்திய துடுப்பாட்டத் தொடரில்
இரு பிரிவிலும் கிண்ணங்களை தனதாக்கியது கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம்.
5 பந்துப்பரிமாற்றங்கள்
5 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் யாழ். கொட்டடி இளந்தளிர் விளையாட்டுக்கழகமும் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொட்டடி இளங்கதிர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத் தீர்மானித்து 27 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 28 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு பதிலுக்கு களமிறங்கிய ஞானம்ஸ் அணி 3.3 பந்துப் பரிமாற்றங்களில் 2 இலக்குகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது.
10 பந்துப்பரிமாற்றங்கள்
தொடர்ந்து இடம்பெற்ற 10 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட இறுதியாட்டத்தில் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகமும் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழகமும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய வீனஸ் அணி 9.1 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது. 45 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம் 6.1 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து இலக்கினை அடைந்தது.

ad

ad