புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2015

ஐ.எஸ்.எல். புனே அணியிடம் மும்பை அணி தோல்வி!

ந்தியன் சூப்பர் லீக்கின் இரண்டாவது சீசனின் மூன்றாவது போட்டியில், நேற்று மாலை 7 மணிக்கு மும்பை சிட்டி அணியுடன்
  புனே சிட்டி அணி மோதியது.. மகாராஷ்டிரத்தை சேர்ந்த இந்த  அணிகள் மோதிய இந்த 'டெர்பி' போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கோல் கீப்பர் சுப்ரதா பால் ஆகியோர் விளையாடவில்லை.  உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இருவரும் பங்கேற்க இருப்பதால் இந்த  இருவரும் தேசிய அணிக்காக விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இரு முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், மும்பை அணியின் கேப்டனும் பயிற்சியாளருமான நிக்கோலஸ் அனெல்கா,  முதல் 11 பேர் கொண்ட அணியில் களமிறங்கவில்லை.அதே வேளையில் புதிய பயிற்சியாளர் பிளாட்டின் உத்வேகத்தில் ஆரம்பம் முதலே அசத்தியது புனே அணி.

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் புனே அணியின் டன்கஸ் சன்லி முதல் கோலை அடித்தார். இஸ்ரைல் குருங்க் கொடுத் கிராஸ் பந்தை, தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார் சன்லி. போராடிய மும்பை அணி, பிக்குயோன் மூலம் பதில் கோல் திருப்பியது. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் போட்டி சம நிலையை எட்டியது.
 
பிற்பாதியில் புனே அணியின் அதிரடி ஆட்டத்தின் முன்பு மும்பை சற்று நிலைகுலைந்தே போனது. அதன் பலனாக 56வது நிமிடத்தில் முதல் கோலைப் போலவே, குருங்க் கொடுத்த பாஸை தலையால் முட்டி கோலாக்கினார் சன்லி. இந்த பின்னடைவில் இருந்து மீண்டு வருவதற்குள், புனே அணிக்காக முதல் இரு கோல்கள் அடிக்க உதவிய குருங்க், 68 வது நிமிடத்தில் தானே ஒரு கோலடித்து அசத்தினார்.

பின்னர் கேப்டன் நிகோலஸ் அனெல்கா, ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் களம் புகுந்தார். கடைசி கால் மணி நேரம் போராடியும் அவரால் எந்த மாற்றமும் கொண்டு வர முடியவில்லை. இறுதியில் புனே அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

கோவா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், டெல்லி அணியின் கேப்டன் ராபர்டோ கார்லோஸ் இதேபோல், தான் முதலில் களமிறங்காமல் பிற்பாதியில்தான் இறங்கினார். அவர் இல்லாமல் தடுப்பாட்டத்தில் சொதப்பிய டெல்லி அணி 2-0 என தோற்றது. இன்று  அனெல்காவும் அதே போல் தவறிழைத்தது புனேவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்து விட்டது. 

ad

ad