புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2015

எமது பிள்ளைகளுக்கும் முகாம் என்ற அடைமொழி வேண்டாம்: யாழில் வலியுறுத்து

முகாம் பிள்ளைகள் என்ற அடைமொழி இல்லாது எம் பிள்ளைகள் வாழ வேண்டும் என பெண் தலைமைத்துவ குடும்பங்களில் பிரிதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.


தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று  காலை யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 
பாடசாலையில் எமது பிள்ளைகளை முகாம் பிள்ளை என்றே அழைகின்றார்கள். எமது பிள்ளைகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்றாலோ அல்லது ஏதேனும் சிறப்பாக செய்தாலோ யார் அந்த பிள்ளை என வேறு ஆட்கள் கேட்கும் போது எமது பிள்ளைகளை அந்த முகாம் பிள்ளைகள் என்றே அறிமுகம் செய்து வைக்கின்றார்கள்.
முகாம் சனங்கள் என அழைக்கப்பட்ட எமது காலம் முடிவடைகின்றன, எமது பிள்ளைகளும் முகாம் பிள்ளைகள் என்ற அடைமொழியோடு தொடர்ந்து இந்த முகாம்களில் வாழக் கூடாது.அவர்களின் எதிர்காலம் முகாம் சனம், முகாம் பிள்ளைகள் என்ற அடைமொழி இல்லாது அமைய வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் எம்மை எமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ad

ad