புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2015

தனது கதிரையை சம்பந்தன் குறுக்குவழியில் பறித்து விட்டாராம்! – ஆனந்தசங்கரி கூறுகிறார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியை, சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து விட்டார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்
வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
 யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்-
கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு ஆயுத வழியில் சென்ற நான் ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என கோரி இருந்தார். அவ்வேளை கருணா அம்மானை வெளியே விட்டது தவறு உடனே திரும்ப அழைத்து உங்களிடையே உள்ள வேற்றுமைகளை களையுமாறு கோரி நான் உடனே பிரபாகரனுக்கு கடிதம் எழுதினான்.
தற்போது கருணா வசிக்கும் வீடும் எனது வீடும் அருஅருகில் உள்ளன. அதனால் நாம் அடிக்கடி வெளியில் சென்று வரும் போது சந்திந்தித்து கொள்வோம் அப்போது பரஸ்பரம் நலன் விசாரித்து கொள்வோம். அதெல்லாம் முதலாம் கட்டம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் அல்ல. அவருக்கு என்னுடன் சேர்ந்து ஜனநாயக பாதையில் செல்ல விருப்பம் இருக்கின்றது அதனை வெளிப்படுத்தி உள்ளார். அதனை வைத்து முதலாம் கட்ட பேச்சு இரண்டாம் கட்ட பேச்சு மூன்றாம் கட்ட பேச்சு என கூறுவது அனைத்தும் முழு பொய். புதிதாக அமைப்பு ஒன்றினை தொடங்க முயற்சிக்கும் செய்தி கசிய தொடங்கியதும் அதனை இல்லாது ஒழிக்கவே இவ்வாறன திட்டமிட்ட வதந்தி பரப்பப்பட்டது.

இன்றைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு படிப்படியாக செல்லா காசாக போய்க்கொண்டு இருக்கின்றது. நான் எழுதிய மூன்று கடிதம் தொடர்பில் வெளிப்படுத்தி இருந்தால் என்றைக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்ல காசு ஆகி இருக்கும். யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்த வேளை ஏப்பிரல் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சங்கரமேனன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்திக்க அழைத்து இருந்தனர். அப்போது இவர்கள் கூறினார்கள் யுத்தத்தை நிறுத்துங்கள் சந்திக்க வருகின்றோம் என. அன்று அவர்கள் போயிருக்க வேண்டும் அந்த நேரத்தில் ஏன் கூப்பிட்டு இருப்பார்கள் விருந்து கொடுக்கவா ? போயிருந்தால் இந்திய அரசாங்கம் ஏதேனும் வழி சொல்லி இருக்கும்.இந்தியா அரசாங்கமா யுத்தத்தை நடத்தியது. யுத்தத்தை நிறுத்த, அவர்கள் அன்று போகாது விட்டது, தவறு.

இன்றைக்கு லட்ச கணக்கான மக்கள் செத்து இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் பொறுப்பு. யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் ,விடுதலை புலிகளை விசாரணை செய்ய கூடாது என கூறி வருகின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளையும் விசாரணை செய்ய வேண்டும் என கூறி வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கூறி இருந்தார் விடுதலை புலிகள் தான் பெருமளவான மக்களை கொன்றார்கள் என்று. அந்த ஒரு அறிக்கை போதும் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர்கள் செய்த துரோகத்திற்கு.

விடுதலை புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக ஏற்றுகொள்ள முடியாது என்று நான் சொன்ன ஒரு வார்த்தையால் தான் நான் இன்று துரோகி ஆக்கப்பட்டேன். ஆனால் இனப்பிரச்சனை தொடர்பில் பேச வேண்டும் என்றால் அது விடுதலை புலிகளுடன் தான் பேச வேண்டும் என நான் பலதடவைகள் கூறி இருக்கிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு நாள் விடுதலை புலிகளை நானும் ஏக பிரதிநிதிகளாக ஏற்கவில்லை தான் அதனை நான் வெளியில் கூறவில்லை . நீ ஏன் கூறுகின்றாய் என கேட்டார்.

என்ன நோக்கத்திற்காக விடுதலை புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைவதற்கு நான் அவர்களை ஏக பிரதிநிதிகளாக ஏற்க தயார் என்று கூறி இருகின்றேன். ஆனால் சிலர் ஊடகங்களை நடாத்தி இல்லாத பொல்லாத செய்திகளை திரிபு படுத்தி தங்கள் எண்ணம் போல் அழிவு பாதையில் கொண்டு செல்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது இருந்த நம்பிக்கையினை இழந்து விட்டேன் அதான் பல்வேறு அணிகளை ஒன்று திரட்டி புதிய அணி ஒன்றினை உருவாக்க போகின்றேன்.அதற்கு பல்வேறு தரப்பினை சந்தித்து பேசியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட , அவ்வாறு ஒரு புதிய அணி உருவாகும் போது அதற்கு கருணா வர ஆசைப்பட்டால் அதனை நான் தடுக்க மாட்டேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் சேனாதிராஜா ஆகியோரை சந்தித்தால் நான் கதைக்க மாட்டேன். அவர்கள் எல்லோரும் துரோகம் செய்தவர்கள். எனக்கு அல்ல அவர்களுக்கு வாக்களித்த தமிழ் இனத்திற்கு, தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. ஒரே ஒரு சொல்லு விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லி இருந்தால் நான் தான் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர். சம்பந்தன் உட்கார்ந்து இருக்கும் கதிரை என்னுடையது.அதனை குறுக்கு வழியில் பறித்து அவர் இன்று இருக்கின்றார்.

இப்போது சொல்லுறார் அது வாய் தடுமாறி சொல்லுறாரோ அல்லது தனக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என சொல்லுறாரோ தெரியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது நாங்கள் என்று அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள எல்லோரும் அதனை மாறுகின்றார்கள். தங்களை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் பிழைக்கின்றார்கள் என்பதனை புலிகள் உணர்ந்து இருக்க வேண்டும். புலி தான் செய்தது புலி தான் செய்தது என்று கூறி அவர்கள் பிழைகின்றார்கள்.

இதுவரை அடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைந்த நன்மை ஆனந்தசங்கரியை துரோகி ஆக்கியது மட்டுமே, அதன் ஊடாக தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்கள். என தெரிவித்தார்.

ad

ad