புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

ஊரதீவுபகுதியில் இருந்து ஒரு மாணவி சிரமங்களுக்கு மத்தியில் மகாவித்தியாலத்துக்கு வந்து கல்வி-சைக்கிளேனும் வாங்கி கொடுக்கவில்லை . இ


கர்ணா மச்சி எனக்கு யோகு அண்ணனுடன் எந்தவிதமான தனிப்பட்ட கோபதாபமுமில்லை . நானும் அவரும் யதார்த்தமான விவாதமே நடத்துகின்றோம் . இது புங்குடுதீவின் இன்றைய நிலையின் பல உண்மைகளை வெளிக்கொணரும் என்றே எண்ணுகின்றேன் . நான் என்றென்றும் அவருடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன் , அவரும் எனக்கு பெரும் ஆதரவாய் விளங்குவார் எனும் அவாவுடன் காத்திருக்கின்றேன் .என்னை பொறுத்தவரை ஈபிடிபி அவர்களோடு இணைந்த கூட்டத்தினரும் , எயிட்ஸ் குமார் ( சுவிஸ் குமார் ) கூட்டத்தினருமே என்றென்றும் எனது எதிரிகள் . சரி யோகு அண்ணன் முன்வைத்த விமர்சனங்களுக்கு வருவோம் >>

01 - எமது வீட்டுக்கு முன்னாலேயே ஒரு பிள்ளையார் கோயில் காணப்படுகிறது ( 10 வட்டாரம் - கலட்டி பிள்ளையார் கோயில் ) . அப்பகுதியில் ஆள் நடமாடமே அற்ற நிலையில் அழகாய் இருந்த அக்கோயில் உடைத்து கட்டப்படுகின்றது . அப்பணத்தினை அவர்கள் முதலில் அப்பகுதியில் மக்கள் பாதுகாப்புடன் மீளக்குடியேற வசதிகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் . என நான் வெளிப்படையாகவே கூறியிருந்தேன் . நான் எல்லா விடயங்களையும் முகநூலில் பதிவு செய்வதில்லை . நான் பொதுவாக களத்தில் வேலை செய்வதையே விரும்புபவன் . ஆனால் இனிமேல் நான் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களையும் முகநூலில் பதிவு செய்யலாம் என எண்ணியுள்ளேன் . அதாவது ஊருக்காக ஒரு சதம் செலவழித்தாலும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்துவது . இதன் மூலம் பல விமர்சனங்களுக்கு பதில் வழங்க முடியும் என்பது எண்ணம் .

யோகு அண்ணன் குறிபிட்ட ஊரதீவு கோயில் விவகாரம் பற்றியும் நான் பல மாதங்களுக்கு முன்னரே அப்பகுதியினரிடம் பேசியிருந்தேன் . அப்பகுதியில் சனச்செறிவு மிகவும் குறைவு , வீதிகளில் மின்சாரம் துளியளவும் இல்லை . பஸ் போக்குவரத்து நடைமுறையில் இல்லை . அப்பகுதியில் இருந்து ஒரு மாணவி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மகாவித்தியாலத்துக்கு வந்து கல்வி கற்பதாக அறிந்தேன் . இந்த கோயில்காரர்கள் அம்மாணவிக்கு ஒரு சைக்கிளேனும் வாங்கி கொடுக்கவில்லை . இவர்கள் கோயிலுக்கு ஒதுக்கிய 7 கோடியில் குறைத்து 50 லட்சத்தினையாவது ஊரதீவின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கலாம் . >>> தொடரும்
 — குறியிடல்கள் Siva-sandrabalan Web-of PungudutivuKumar Thillainathan மற்றும் Yogoo Arunakiri உடன்
பிடிக்கவில்லை · கருத்து · அறிவிப்புகளை நிறுத்து· பகிர்
நீங்களும் வேறு 2 பேர்கள் உம் இதை விரும்புகிறீர்கள்.

ad

ad