புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வாக்களிப்பு வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா


புலம் பெயர்ந்து, உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும், வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கலந்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது,
அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களும், தமிழ் நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கும், உலகின் ஏனைய நாடுகளில் வாழ்கின்ற பல இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்கும் வாக்களிக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் வடக்கு, கிழக்கு மக்களை, எமது நாட்டில் முதலீடுகளைச் செய்ய வருமாறு ஜனாதிபதியும் பிரதமரும் அழைப்பு விடுத்துள்ளனர். அது வரவேற்புக்குரியதாகும்.
அதேபோல் அவர்கள் இரட்டை பிரஜா உரிமையின் அடிப்படையில் அல்லது அவர்கள் வாழும் நாடுகளிலுள்ள எமது தூதுவராலயங்களுக்கூடாகவேனும் வாக்களிப்பில் கலந்து கொள்ள விசேட செயற்பாடு அவசியமாகும் என்றும், டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு, இதுபோன்ற ஏற்பாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு தேர்தல் ஆணையாளர் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad