புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2015

தர்சிகாவுக்கு ஈழத்தமிழரவை ஆதரவு

சுவிஸர்லாந்து  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழ் பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை உலக தமிழ் மக்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டும் என சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும்18 திகதி நடைபெறவுள்ளது இந்த தேர்தலில் தனித்தமிழ் பெண்மணியாக பலந்த சவால்களுக்கு மத்தியில் போட்டியிடும் தர்சிகாவை தமிழ்மக்கள் ஆதரிக்கவேண்டிய கடமைப்பாடு  அனைவருக்கும் உள்ளது. 

தாயகத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக ஈழத்தமிழ்மக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து ஏதிலிகளாக பல நாடுகளில் வாழ்த்துவருகின்றோம் பல்துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துவரும் போது அரசியலில் மட்டும் இதுவரை எமது  மக்கள் முனனேற்றம் அடையவில்லை 
கனடா நாட்டில் சி .ராதிகா  ஒருமுறை பாராளமன்ற உறுப்பினராக தெரிவாகி எமக்கு சேவை செய்தள்ளார் அவரும் இந்த முறை கனடா நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில் தாயகத்தில் எமது மக்கள் படுகொலை செய்யபட்டபோது எந்த அரசியல் அதிகாரங்களும் இன்றி எமது நிஜாயங்களை எனைய நாடுகளுக்கு ஏடுத்துரைக்க ஆள்இன்றி இருந்தோம் அதோபோனறு தற்போதும் எமக்கு நடைபெற்றது இனவழிப்புதான் என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்மிடம் எந்த அதிகாரங்களும் இன்றி உள்ளோம் அத்துடன் நாங்கள் வாழும்  நாடுகளில் எமது பிரச்சனைகளை உரிமையுடன் பேசுவதற்கும் எதிர்கால பிள்ளைகளுக்கு அதிகாரத்துடன் வழிகாட்டகூடிய  தலைமைகளை  உருவாக்கவேண்டும்.

எமது இனம் சர்வதேசத்தில் ஒரு பலமான சத்தியாக உருவகவேண்டும் என்றால் நாங்கள் வாழும் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கவேண்டிய தேவையும் கடமைப்பாடும் தமிழ்மக்களுக்கு உள்ளது.

நடைபெறவுள்ள சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் போட்டியிடும்  தமிழ்ப்பெண் தர்சிகாவை அனைந்து தமிழ்மக்களும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும்.

குடியுரிமை உள்ள தமிழ் மக்களுக்கு உங்கள் வீடுகளுக்கு தற்போது வாக்கு அட்டைகள் வந்து சேர்ந்து இருக்கும் ஒருவர் இரு விருப்பு வாக்குகளை தர்சிகாஅவர்களுக்கு அளிக்கமுடியும் பேர்ண் மாநிலத்தில்  2500 மேற்பாட்ட தமிழ் வாக்களர்கள் உள்ளனர் அனைவரும் ஒற்றுமையாக தர்சிகாஅவர்களுக்கு வாக்களித்தால் 5000 தமிழர் வாக்குகளை பெற்றுகொள்ளமுடியும் எனைய இனமக்களின் வாக்குகளுடன் தர்சிகா அவர்களை தமிழ் பிரதிநிதியாக சுவிஸ் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கமுடியும். 

எனவே அனைத்து சுவிஸ் பேர்ண் வாழ் தமிழ்மக்களையும் அன்புடனும் உரிமையுடனும் உங்கள் பணியே சரியாக பயன்படுத்துமாறு ஈழத்தமிழரவை சார்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

கு .குருபாரன்
தலைவர் 
சுவிஸ் ஈழத்தமிழரவை

ad

ad