புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2015

ஈழத்தமிழச்சியின் எழுச்சிக்குரல் சுவிஸ் பார் ஆளும் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம் (என் அன்புள்ளங்களே .வாசகர்களே இந்த தகவலை பகிர்ந்து எடுத்துச் சென்று பரப்பி உதவுங்கள் )

எதிர்வரும் 18  ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது  என்பதை   நாம் அறிவோம்.இருந்தாலும் சுமார் மூன்று தசாப்தங்களான எமது சுவிஸ் புலம்பெயர் வாழ்வில்  முதன்முதலாக ஒரு ஈழத்து மங்கை  போட்டியிடுகிறார் என்பதே புதிய தகவல்,மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ,பரபரப்பு .இந்த தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் இருந்து சோஷலிச கட்சி வேட்பாளாராக களமிறங்கி இருக்கும் தர்சிகா கிருஷ்ணானந்தம்  வடிவேலு ஏற்கனவே நமக்கு மிகவும் நன்கு அறிமுகமானவர் தான் . எமது இனத்துக்கான விடுதலை பயணத்தின் தற்போதைய இடைவெளிக்கு  உலக அரங்கில் எம்மை அரசியல் மயப்படுத்த தவறி விட்டமை அல்லது போதாமை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும் . இனிவரும் காலங்களிலாவது இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில் உலக நாடுகளின் அரசியலில் எம்மினத்தவரின் ஆளுமை இருந்தாக வேண்டும் . நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஜனநாயக ஆட்சி வட்டத்துக்குள் நாமும் உள்வாங்கபடவேண்டும் .பல நாடுகளில் செறிந்து வாழும் ஈழத்து தமிழருக்கு இந்த உள்வாங்கல் இன்னும் பதிவாகவில்லை என்பதே உண்மை .இந்த ஒரு நோக்கத்துக்காக எதிரகாலதிலாவது நாம் இந்த நாடுகளின் பாராளுமன்ற உள்ளூராட்சி மன்ற கதவுகளை திறக்க வேண்டும் . ஆம் எங்களால் முடியும் .திருமதி தர்சிகா அவர்கள் ஈழத்தில் பிறந்து சுவிசில் வேரூன்றி இரண்டு தலைமுறைகளுக்கு இணைப்பு பாலமாக வாழ்ந்துவருபவர் .சிறுவயது முதலே இவரது குடும்பம் தமிழின விடுதலைப்பணி  ,சமூக சேவை மற்றும் ஆன்மீக தேடல்கள் என ஈடுபாடு  கொண்டு  வாழ்ந்து வரும் குடும்பப பின்னணி இவருக்கு பெரிய தகமையாகும் ஐவரும் அவ்வலை யோற்றியே தனது வாழ்க்கை பயணத்தை தொடர எண்ணி காலடி எடுத்து வைத்துள்ளார் . சமூகத்தின் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக மனிதஉரிமை செயல்பாடுகளில் கணிசமான பங்கினை ஆற்றி வரும் இவர் அண்மையில் கூட ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சங்க நிகழ்வுகளில்  கலந்து எம்மினத்துக்காக  குரலெழுப்பி இருந்தமை நீங்கள் அறிந்ததே . இவரது இந்த சுவிஸ் நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற முத்திரை கொண்டு இவரது குரல் உலக அரங்கின் செவிப்பறையை சேர வேண்டுமெனில் , செயல்பாடுகள் மேலும் வலிமை கொள்ள வேண்டுமெனில் இவர் வாழும் சுவிஸ் நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற முத்திரை தான் இன்னும் இலகுவாக்கும் . ஆகவே தான் சுவிஸ் வாழ் ஈழத்து தமிழன் ஒவ்வொருவனும் இவரது வெற்றியை உறுதிப்படுத்த சபதமெடுப்போம் . வாக்குரிமை உள்ளவர்கள்  நேரகாலத்தோடு உங்களுடைய இரண்டு வாக்குகளையும்   இவருக்கே அளியுங்கள் .மற்றவர்கள் கூட உங்கள் உறவுகள் நண்பர்களை ஊக்குவித்து இவருக்கு வாக்களிக்குமாறு கேட்டு உதவலாம் .வேறு நாடுகளில் வாழும் நெஞ்சங்கள் கூட சுவிசில் வாழ்கின்ற உங்கள் உறவுகள் நண்பர்களை உணர்வூட்டி உதவலாம் . அன்பார்ந்த உள்ளங்களே. இந்த வரலாற்றுக் கடமையை தாமதம் செய்யாமல் இப்போதே ஞாபகத்தோடு ஆற்ற முன்வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் . தபால் மூலம் வாக்களிப்பது உங்களுக்கு இலகுவான செயலாக இருக்கும் என நம்புகிறேன் .இல்லையேல் உங்கள் பகுதி உள்ளூராட்சி அலுவலகத்தில்(Gemeinde ,Stadt )நேரிலும் வாக்களிக்கலாம்  ஈழத்தமிழச்சியின் எழுச்சிக்குரல் ஆளும் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் .இந்த மாண்புறு செய்தி ஞாலத்தில் நாளை  வெளிவரட்டும் . நன்றி 

ad

ad