புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2015

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் பதிவுகள் செய்யப்பட்டு வாழ்வாதார உதவிகளை தெரிவு செய்த சுமார் 125 அரசியல் கைதிகளின்
குடும்பங்களுக்கான உதவித் திட்டங்களை வழங்கும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்துக்கு அமைவாக, அந்தந்த மாவட்டங்களில் சென்று வழங்கும் நிகழ்வுகள் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இடம்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டம, மன்னார் மாவட்டம், யாழ் மாவட்டம், கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு இம்மாதம்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாழ்வாதார உதவித்திட்டங்களை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோர் இணைந்து வளன்கிவைத்தனர். 
இவ்வாறு வழங்கப்பட்ட பசுமாடுகள், கோழிவளர்ப்பு, சிறு கைத்தொழில் முயற்சிக்கான உபகரணங்கள் இவ்வாறான உதவித்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் நாளாந்தம் 300 ரூபா தொடக்கம் 500 ரூபாய் வரையில் வருமானத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ad

ad