புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளனர்

cri
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 நாள் ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆரோன் பின்ச், கார்ட்டர்ஸ் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி சிட்னியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் கார்ட்டர்ஸ் களமிறங்கினர். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கி ரன் குவித்தது. அதாவது தொடக்க விக்கெட்டுக்கு 503 ரன்களை விளாசியது.
நியூசிலாந்து அணியில் விக்கெட் கீப்பரைத் தவிர மற்ற அனைவரும் பந்துவீசியும், இந்த ஜோடியை 503வது ரன்னில் பிரிக்க முடிந்தது. இதில் கார்ட்டர்ஸ் 364 பந்துகளில் 209 ரன்கள் எடுத்த நிலையில் லாதம் பந்தில் வீழ்ந்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். அதே வேளையில் பின்ச் 363 பந்துகளில், 24 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் உதவியுடன், 288 ரன் எடுத்தார். இவர் கடைசி வரை அவுட் ஆகவில்லை.
ஒரு கட்டத்தில் பிட்ச்சின் மோசமான தன்மை காரணமாக இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பொறுத்த வரை, ஒரு ஜோடி 503 ரன்களை சொந்த மண்ணில் எடுத்துள்ளது புதிய சாதனைதான்.

ad

ad