புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2015

ஜெ.,வுக்கு வைகோ விடுத்த பகிரங்க சவால்! ( ஆடியோ





மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவன் திருச்சியில் கைது செய்யப்பட்டார். “மூடு டாஸ்மாக்கை மூடு’’, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களை பாடி வெளியிட்டதற்காக  நேற்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர்.  அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 ஏ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 

இந்நிலையில் இன்று 31.10.2015ல் திருச்சியில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது அவர்,  ’’கைது செய்யப்பட்டுள்ள கோவன் உடனடியாக  விடுதலை செய்யப்படவேண்டும்.  வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டும்.   அதை நீங்கள் செய்யமாட்டீர்கள்’’ என்று கூறியபின்னர்,  ‘’ஊருக்கு ஊர் சாராயம் தள்ளாடுது தமிழகம் மூடு மூடு டாஸ்மாக் கடையை  ஊற்றிக்கொடுத்த உத்தமி போயசிலே உல்லாசம் ’’ என்று கோவன் பாடலை வைகோ பாடப்பாட கூட்டத்தினர் பாடினர்.  பின்னர் வைகோ, ‘’இப்படி பாடியதற்காக முடிந்தால் என் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுங்கள்’’ என்று பகிரங்கமாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால் விடுத்தார்

ad

ad