புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: அரசாங்கம்


இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது 600 பொலிஸார் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டமை மற்றும் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டமை என்பன ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இந்த சம்பவங்களின்போது என்ன நடந்தது என்பதை அறிந்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது.
படையினரின் நல்லப்பெயரை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்தப்பொறுப்புக்கூறல் நடவடிக்கையை சர்வதேசத்தில் இலங்கை மாத்திரமே மேற்கொள்கிறது என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இலங்கையில் காணாமல் போன பொதுமக்கள், படையினர், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துக்கொள்ள அனைவருக்கும் உரிமையுள்ளது.
இந்த அறிந்துக்கொள்ளல் நடவடிக்கையானது இலங்கையின் சட்டதிட்டத்துக்குள் இருந்து மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அடிப்படையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்கீழ் தென்னாபிரிக்காவின் உதவியுடன் உண்மையை கண்டறியும் குழு அமைக்கப்படவுள்ளது.
சிரேஸ்ட மதத்தலைவர்களை கொண்ட கருணைசபை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
ஐ.சி.ஆர்.சியின் நிபுணர்களின் உதவியுடன் காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
நான்காவதாக உண்மையை கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அலுவலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ad

ad