புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2015

பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சிக்குவாரா மகிந்தா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையும் நாளை மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவ்வாறு மஹிந்த, ஆணைக்குழு எதிரில் முன்னிலையாகவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிலருக்கு விசாரணைகளுக்காக ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அனுர சிறிவர்தன உள்ளிட்டவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரச்சாரத்திற்காக செய்த விளம்பரங்களுக்கான கட்டணங்கள் இன்னமும் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் 115 மில்லியன் ரூபா இவ்வாறு செலுத்தப்பட உள்ளதாகவும் பொது வேட்பாளராக போட்டியிட்ட இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பணம் பெற்றுக்கொண்டு விளம்பரம் செய்யவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, விளம்பரம் செய்தமை குறித்த கட்டணங்களை தாம் செலுத்த முடியாது கட்சியிடம் அதனை அறவீடு செய்யுமாறும் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலின் போது பணம் செலுத்தாமல் விளம்பரம் செய்து மோசடி செய்தது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நாளையும் நாளை மறுதினமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்பி அதற்காக 101 மில்லியன் ரூபா செலுத்தாமை மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிபரப்பாது நஷ்டத்தை ஏற்படுத்தியமை ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐ.ம.சு.மு. முன்னாள் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஐ.ரி.என். முன்னாள் தலைவர் மற்றும் ஐ.ரி.என். உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரிக்கப்பட இருப்பதாக ஆணைக்குழு செயலாளர் தெரிவித்தார்.
இது தவிர விமான சேவையில் இடம்பெற்ற மோசடி குறித்து முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன (தற்போதைய சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர்) மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை தலைவராக இருந்த சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிசாந்த விக்ரமசிங்க ஆகியோர் நாளை மறுதினம் விசாரிக்கப்பட இருப்பதாகவும் லெசில் த சில்வா குறிப்பிட்டார்.

ad

ad