சனி, அக்டோபர் 24, 2015

அரசியல் தீர்வு வழங்குவதற்கு பிரதான கட்சிகள் இணக்கப்பாட்டை வெளியிட்டன: சம்பந்தன்


உண்மையைக் கண்டறிதல், சட்டத்தை அமுல்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குதல், கடந்தகால சம்பவங்கள் மீள நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் இடம்பெற்றால்தான், உண்மையான நல்லிணக்கம் பிறக்கும்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்று சர்வகட்சி குழு கூட்டத்தில் கருத்து முன்வைக்கப்பட்டது.
இதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டனர். அத்துடன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கும் பிரதான கட்சிகள் பொது இணக்கப்பாட்டை வெளியிட்டன. 
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சர்வகட்சிகளினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.