புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2015

சுமந்திரன், மாவை ,சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சியினர் புதினம் பார்க்கவே ஜெனிவா சென்றனர்- சுரேஷ்


தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை ஜெனிவா வந்தனர். இவர்கள் ஜெனிவாவுக்கு புதினம் பார்க்க
வந்தனரே தவிர வேறு எந்த பிரயோசனமும் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
நானும் அனந்தியும் சிவாஜிலிங்கமும் 12 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். பல கூட்டங்களில் பேசினோம். ஆனால் சுமந்திரன், மாவை சேனாதிராசா, சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில மாகாணசபை உறுப்பினர்களும் ஜெனிவாவுக்கு புதினம் பார்க்க வந்தனரே தவிர இவர்கள் எந்த நாட்டு தலைவர்களையும் சந்திக்கவில்லை.
தமிழரசுக்கட்சியினரும் ரெலோவை சேர்ந்தவர்களும் ஜெனிவா வந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதுதான் அவர்கள் செய்த ஒரு வேலை. வேறு எதனையும் அவர்கள் செய்யவில்லை,பணத்தையும் நேரத்தையும் செலவழித்து ஜெனிவா சென்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்க வேண்டியதில்லை, கொழும்பிலேயே பத்திரிகையாளர் மகாநாட்டை நடத்தியிருக்கலாம் என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ad

ad