வெள்ளி, அக்டோபர் 30, 2015

முதலமைச்சர் அவர்களே முஸ்லிம்களுக்காக ஆணைக்குழு அமைக்க பரிந்துரை செய்யுங்கள் : யாழில் கவனயீர்ப்பு

யாழ். மாவட்டத்திலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை  நினைவுகூறும் வகையில் யாழ். முஸ்லிம் மக்கள்
இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த கவனயீர்ப்பில் 1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லீம்களின் இனச்சுத்திகரிப்பு,1990-10.30 கரி நாள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது,முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே யாழ்.முஸ்லிம்களுக்காக ஆணைக்குழு அமைக்க பரிந்துரை செய்யுங்கள், போன்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.