புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

யாழ். நீதிமன்றத் தாக்குதல் வழக்கு: சந்தேக நபர்களுக்குக் கடும் நிபந்தனையுடன் பிணை

யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ்.
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். 

இந்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகள் நீதிபதி இளஞ்செழியன், முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என சந்தேக நபர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தங்களுக்கு முன்னர் குற்றம் செய்தது என்பதற்கான தீர்ப்பு எதுவுமில்லை எனவும், அத்தகைய வழக்குகள் எதுவும் நிலுவையிலுமில்லை எனவும் இதுதான் ஒரேயொரு வழக்கு எனவும் வித்தியாவின் கொலைக்கு அனுதாபம் தெரிவிக்க வந்து, மறியல் சாலையில் இருப்பதாக சந்தேக நபர்கள் சார்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. 
சந்தேக நபர்கள் சார்பில் கூறப்பட்ட அனைத்தையும் விடயங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி சந்தேக நபர்களுக்கு கடும் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கினார். 
அந்தப் பிணை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கின்றது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களின் கடவுச்சீட்டுக்களைப் பறிமுதல் செய்வதற்கு உத்தரவிடப்படுகின்றது. அத்துடன் இந்த சந்தேக நபர்களை நாட்டை விட்டு வேறு ஏதேனும் வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டாளருக்குக் கட்டளையிடுகின்றது. 
சந்தேக நபர்களை பிணையில் அழைத்துச் செல்வதற்கு தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணையாளிகள் கையெழுத்திட வேண்டும். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்கும் பகல் 12 மணிக்கும் இடையில் சந்தேக நபர்கள் யாழ் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பிணை உத்தரவை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் சந்தேக நபர்களை நோக்கி ‘யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பிலான 20 வழக்குகளினதும் விசாரணைகளில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு 20 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையும், அரச சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதம் தொடர்பான மதிப்பீட்டில் 3 மடங்கு தொகைப் பணம் நட்டயீடாக செலுத்த வேண்டும் என்ற தண்டமும் வழங்குவதற்கு சட்டம் பரிந்துரை செய்கின்றது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்’ என விசேடமாக சுட்டிக்காட்டியுள்ளார். 

ad

ad