புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2015

கிண்ணம் வென்றது சென்.மேரிஸ் அணி

அராலி ஏ.எல். விளையாட்டுக்கழகமும், அராலி ஏ.எல். இளைஞர் கழகமும் இணைந்து யாழ்., வலிகாமம், வடமராட்சி, பருத்தித்துறை
மற்றும் தீவகம் ஆகிய உதைபந்தாட்ட லீக்குகளில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு இடையில் நடத்திய 9 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான உதைபந்தாட்டத் தொடரில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி சம்பியன் ஆனது.
நேற்று முன்தினம் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதிக் கொண்டது. முதல் கோலுக்கான போராட்டம் இறுதியாட்டத்துக்குரிய பாணியில் இருக்கவே செய்தது. 19 ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் அணியின் யூட், ஆட்டத்தினதும் தனது அணியினதும் முதல் கோலைப் பதிவு செய்தார். றோயல் அணியால் பழிதீர்க்க முடியாத நிலையில் 1:0 என முடிவடைந்தது முதல் பாதி.
இரண்டாம் பாதியில் வேறெந்தக் கோல்களும் பதியப்படவில்லை. கிடைத்த வாய்ப்புக்களையும் இரு அணியினரும் மாறிமாறித் தவறவிட முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் சம்பியனானது சென். மேரிஸ். சிறந்த வீரனாக ஊரெழு றோயல் அணியின் கஜகோபனும், சிறந்த கோல்காப்பாளராக நாவாந்துறை சென்.மேரிஸ் அணியின் அனஸ்ரினும் தெரிவானார்கள். சிறந்த அணியாக பாஷையூர் சென். அன்ரனிஸ் அணி தெரிவாகியது.

ad

ad