புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

வடமாகாண இலக்கிய பெருவிழா கிளிநொச்சியில் கோலாகலம்


வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில்,  வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடக்கு மாகாண இலக்கிய பெருவிழா இவ் வருடம்  கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
                              
 நேற்றும்,இன்றுமாக இரண்டு நாட்களும் கிளிநொச்சி கூட்டுறவு  மண்டபத்தில் இவ்விழா இடம்பெறுகின்றது.நேற்று பி.ப 2 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அ.அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
                              
நேற்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற .உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைக்கப்பட்ட போதிலும், அவர் சமூகம் கொடுக்கவில்லை. வடமாகாண  கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடைபெறவுள்ள இரண்டு நாள் நிகழ்வுகளிலும், வடக்கு மாகாணத்தில் உள்ள கலைஞர்கள், பாடசாலைகளினதும் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற உள்ளதுடன், “ கௌரவ முதலமைச்சர் விருது” சிறந்த நூலிற்கான பரிசில் வழங்கல் நிகழ்வு,  இடம்பெற்றது.
                             

இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகள்  பி.ப 1.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளதென்பதுடன், பிரதம விருந்தினராக வட.மாகாண முதலமைச்சல் சி.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad