புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை மீது தனிக்கவனம் வேண்டும்-சர்வதேச மனி்த உரிமை அமைப்புகள்

இலங்கையின் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் தனியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனி்த உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள
கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவாவில் கடந்த மூன்று வாரங்களாக நடந்து வந்த ஐ.நா. மனிதகள் உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தொடரின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் குறித்து, 10 மனி்த உரிமை அமைப்புகள் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த, பிலிப் டாம் வெளியிட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையில்,
"இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரங்களிலும்,உறுதியான முடிவுகளைத் தருவதற்கு, விடாமுயற்சியுடன்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதிலும்தொடர்ந்தும் தனியான கவனம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்கின்றோம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்தலைமைத்துவம், துணிச்சல், உறுதி ஆகியவற்றுக்கு இது, நல்லதொருமுன்னுதாரணமாக அமையும்” - என்றும் அந்தக் கூட்டறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை, ஆட்டிக்கல் 19, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு, மனித உரிமைகள் கற்கைக்கான கெய்ரோ நிறுவகம், சிவிகஸ், ஈஸ்ட் அன்ட் ஹோர்ன் ஆபிரிக்க மனித உரிமைகள் பாதுகாப்புத் திட்டம், மனித உரிமைகள் சட்ட நிலையம், மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு,சித்திரவதைகளுக்கு எதிரான உலக அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ad

ad