புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

கொழும்பை அண்மித்த பகுதிகளில் புலிகளுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள்! திவயின செய்தி


கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் எவ்வாறு இந்த சொத்துக்களை சேகரித்தார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் கவனம் செலுத்தவில்லை என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
விடுதலைப்புலிகள் அமைப்பு கொழும்பில் வெள்ளவத்தையில் தொடர்மாடித் தொகுதி, இரண்டு அச்சகங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் பெரிய காணியொன்று என்பவற்றை உரித்தாக்கிக் கொண்டுள்ளது.
இது பற்றி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை சேகரித்துள்ளனர்.
சமாதான ஒப்பந்தம் நிலவிய காலப்பகுதியில் ஏ-9 பாதை வழியாக பயணித்த வாகனங்களில் இருந்து புலிகள் பெற்றுக் கொண்ட கப்பம் ஊடாக கிடைக்கப் பெற்ற பணம் மற்றும் தமிழ் வர்த்தகர்களிடமிருந்து கப்பமாக அறவிடப்பட்ட பணம் ஆகியனவே இவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்துக்கு போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அளித்தவர்கள் விடுதலைப் புலிகளின் குறித்த சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை அளிக்கவில்லை என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad