புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2015

குற்றவியல் சட்டத்தைமாற்றல் ,இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் விசாரணை க்கான ரோம் ஒப்பந்தம் செழ்சா சுவ்பிஸ் வலியுறுத்தல் இலங்கை கடுப்பில்


குற்றவியல் சட்டத்தைமாற்றல் ,இலங்கைப் பிரஜைகளை சர்வதேச நீதிமன்றில் விசாரணை க்கான ரோம்
ஒப்பந்தம் செய்ய சுவிஸ் வலியுறுத்தல் இலங்கை கடுப்பில் இலங்கையின் உள்விவகாரங்களில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடுமையாக நாட்டின் உள்விவகாரங்களில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் குற்றவியல் சட்டத்தை மாற்றியமைக்குமாறு சுவிட்சர்லாந்து கோரியுள்ளது.
இலங்கைப் பிரஜைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணை நடத்தி தண்டனைக்கு உட்படுத்தக் கூடிய ரோம் பிரகடனத்தில் கையொப்பமிட வேண்டுமெனவும் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளது.
எவ்வாறெனினும், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad