புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

றக்பி உலகக் கிண்­ணத்தின் இறு­திப்­போட்­டியில்நியூ­ஸி­லாந்தும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் மோதவுள்ளன.

இங்­கி­லாந்தில் நடை­பெற்­று வரும் றக்பி உலகக் கிண்­ணத்தின் இறு­திப்­போட்­டியில்நியூ­ஸி­லாந்தும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் மோதவுள்ளன.

நேற்று நடை­பெற்ற இரண்டா­வது அரை­யி­று­திப்­போட்­டியில் ஆர்­ஜன்­டீ­னாவும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் பலப்­ப­ரீட்சை நடத்­தின. இந்­தப்­போட்­டியில் 15–29 என்ற அடிப்­ப­டையில் அவுஸ்­தி­ரே­லியா வெற்­றி­பெற்று இறு­திப்­போட்­டிக்கு நுழைந்­தது.
இதே­வேளை நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­றுதி போட்­டியில் தர­வ­ரிசைப் பட்­டி­யலில் முதல் நிலையில் இருக்கும் நியூ­ஸி­லாந்து அணியும்இ தர­வ­ரிசைப் பட்­டி­யலில் மூன்­றா­மி­டத்தில் இருக்கும் தென்­னா­பி­ரிக்­காவும் பலப்­ப­ரீட்சை நடத்­தின.
இந்­தப்­போட்­டியில் இரு அணி­களும் சளைக்­காமல் சரிக்கு சம­மாக தங்கள் வெற்­றியை உறு­தி­செய்யப் போரா­டி­ய­போதும் இறு­தியில் நியூ­ஸி­லாந்து 20 – 18 என வெற்றி பெற்று இறுதி போட்­டிக்கு முன்­னே­றி­யது.
கடந்த ஒரு மாத­மாக நடை­பெற்­று­வந்த றகபி உலகக் கிண்ணப் போட்­டியின் இறு­திப்­போட்டி எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. 2015ஆம் ஆண்­டுக்­கான றக்பி உலகக் கிண்­ணத்தை வெல்லப்போவது ஆஸியா? நியூஸியா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ad

ad