புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

இலங்கை போர்குற்ற விவகாரம் மத்திய அரசு மேலும் மவுனம் காப்பது சரியல்ல : சரத்குமார்



சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இலங்கை தமிழர்கள் மீது நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல்களால் ஒன்றரை லட்சம் தமிழர்களை நாம்  இழந்தோம். இலங்கையில் இனப்படுகொலைச் செயல்களை விசாரித்த ஐ.நா மனித உரிமை ஆணையம், இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றது உண்மைதான்  என்ற அறிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவின்சிலில் சமர்ப்பித்தது. இதை எதிர்த்து அமெரிக்கா உள்பட பலநாடுகள் சேர்ந்து உள்நாட்டு விசாரணையை  ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் வெளிநாடுகளில் இருந்தும் நீதிபதிகள் பங்கேற்பது என்று முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது இலங்கை அரசால்  உருவாக்கப்பட்ட விசாரணை அமைப்பே போர்க்குற்றம் நடைபெற்றிருப்பது உண்மை தான் என்று கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசு மேலும்  மவுனம் காப்பது சரியல்ல. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைத்திட, சர்வதேச விசாரணையை உருவாக்க  வேண்டும். அப்போது தான் உண்மை முழுமையாக வெளிவரும். இது உலகத்தமிழர்களின் வேண்டுகோள் என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ad

ad