புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

ஓபிஎஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற போலீஸ் எஸ்.ஐ. சிறைவைப்பு



விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் திருப்பதி வெங்கடாஜலபதி (50). இவர் இருக்கன்குடி வைப்பாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். இவரின் செயல்பாடுகளை பாராட்டி டிஐஜி ஆனந்த்குமார் சோமானி, கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருப்பதி வெங்கடாஜலபதியை நேரில் அழைத்து பாராட்டி விருது வழங்கினார். இதனால் உற்சாகம் அடைந்த திருப்பதி வெங்கடாஜலபதி தனது பணியில் மேலும் வேகம் காட்டினார். 

இது மணல் கடத்தலில் ஈடுபட்டுவந்த ஆளுங்கட்சியினருக்கு கடும் நெருக்கடியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்பதி வெங்கடாஜலபதி விருதுநகர் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்தார் எஸ்பி மகேஸ்வரன். இதனால் திருப்பதி வெங்கடாஜலபதி கடும் மன உளைச்சலில் இருந்தார். இதுசம்பந்தமாக சில நாளுக்கு முன்பு எஸ்பியை சந்திக்க நீண்ட அலைக்கழிப்புக்கு பிறகு அனுமதி கிடைத்தது. அப்போது, வெங்கடாஜலபதி, ‘நான் என்ன தப்பு செய்தேன். என்னை ஏன் டிரான்ஸ்பர் செய்தீர்கள்’ என்று எஸ்பி மகேஸ்வரனிடம் கேட்டிருக்கிறார்.  ஆனால் எஸ்பி அவரை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார். 

இந்த நிலையில், அதிமுகவின் 44வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் விருதுநகர் வந்தார். இவரை சந்தித்து இடமாற்றம் தொடர்பாக புகார் அளிக்கவேண்டும். சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் தீக்குளிப்பேன் என்று சக போலீசாரிடம் திருப்பதி வெங்கடாஜலபதி கூறியதாக தெரிகிறது. இதுபற்றி தகவலறிந்த உளவுத்துறையினர், விருதுநகர் எஸ்பி மற்றும் ஏஎஸ்பிக்கு தகவல் கொடுத்தனர். 

இதனால் பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிய எஸ்பி மகேஸ்வரன், திருப்பதி வெங்கடாஜலபதியை மீண்டும் அப்பையநாயக்கன்பட்டிக்கே டிரான்ஸ்பர் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் சாத்தூர் டிஎஸ்பி குமார் வசம் திருப்பதி வெங்கடாஜலபதி ஒப்படைக் கப்பட்டார். அவர் ஒரு போலீஸ் ஜீப்பில், 4 போலீசாருடன் திருப்பதி வெங்கடாஜலபதியை ஏற்றினார். ஓபிஎஸ் விழாவில் பேசி முடித்துவிட்டு செல்லும் வரை ஜீப்பிலேயே திருப்பதி வெங்கடாஜலபதி காவல் வைக்கப்பட்டார். ஓபிஎஸ் விருதுநகரில் இருந்து சென்ற தகவல் கிடைத்ததும், சாத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே திருப்பதி வெங்கடாஜலபதியை இறக்கிவிட்டு போலீசார் சென்று விட்டனர். இந்த சம்பவம் வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் பரவி வருகிறது.

ad

ad