புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2015

பிரதமராகிறார் ஜஸ்டீன் டிரிடியு.கனடா பாராளுமன்ற தேர்தல்: ஆட்சியை பிடித்தது லிபரல் கட்சி!

கனடாவின் புதிய பிரதமாக லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் டிரிடியு பதவியேற்கவுள்ளார்.
கனடாவின் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி, என்டிபி கட்சி மற்றும் சில கட்சிகள் போட்டியிட்டன.
இதில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில், மறைந்த முன்னாள் பிரதமர் பியெர் ட்ருதாவின் மகனான ஜஸ்டின் டிரிடியு தலைமையிலான லிபரல் கட்சி 188 தேர்தல் மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறது.
கன்சர்வேடிவ் கட்சி 107 ஆசனங்களில் முன்னிலை வகிக்கிறது. இடது சாரியான என்.டி.பி. கட்சி 34 ஆசனங்களில் முன்னிலை வகிக்கிறது.
இங்கு மொத்தம் 338 ஆசனங்கள் ஆகும். ஆட்சி அமைக்க பெறும்பான்மையாக 170 ஆசனங்களில் வெற்றி பெற வேண்டும்.
இதன் மூலம் கன்சர்வேட்டிவ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி அங்கு முடிவுக்கு வருகிறது.
ஈழத்தமிழர்கள் 6 பேர் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டனர். இதில் ஸ்காபரோ ரூச்பார்க் என்ற தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி ஒருவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய் வாழ்த்து
கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கவிருக்கும் டிரிடிவுயை அவரது தாயார் முத்தமிட்டு வாழ்த்தியுள்ளார்.

ad

ad