புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

விஜய் டிவியின் பதில் மோசமானது: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்,  சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்டல் செய்யும் விதத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி அமைந்தது. இதன் வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேமா வெர்ஸன் 2 என்கிற ஒரு விளம்பரம் சமீபத்தில் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் மீண்டும் என்னம்மா இப்படி பண்றீங்களேமா வசனத்தைக் கிண்டல் செய்யப் போகிறார்கள் என்று தெரிந்ததும் ட்விட்டர் பக்கம் வழியாக லட்சுமி ராமகிருஷ்ணன் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஆனால் அந்த நிகழ்ச்சி வழக்கம் போல ஒளிபரப்பானது. 

இந்நிலையில், விஜய் டிவியைச் சேர்ந்த பிரதீப் மில்ராய் பீட்டர் இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு அளித்த விளக்கத்தில், ‘அது ஒரு ஃபன் ஷோ. ஆரம்பத்துல பார்த்துட்டு ஜாலியா இருக்கேனு அவங்களே எங்க சேனலுக்கே வந்து சொன்னாங்களே! திடீர்னு இப்ப ஏன் ஆவேசப்படறாங்கனு புரியலை. யார் மனதையும் புண்படுத்தறதுக்காக எந்த ஷோவையும் பண்றதில்லைங்கிறதை, ஒவ்வொரு ஷோவுக்கு முன்னாடியும் ‘பொறுப்புத் துறப்பு’ங்கிற அறிவிப்புலயே போடுறோமே’ என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: ‘கடைசியாக மறைவிலிருந்து விஜய் டிவி வெளியே வந்து விளக்கம் அளித்துள்ளது. அடடா, என்ன ஒரு விளக்கம்! விஜய் டிவியின் பதில் மோசமானது. பொறுப்புத் துறப்பு (Disclaimer) என்பது தெரியாமல் ஒருவரைக் காயப்படுத்துவதற்காக வெளிடுவது. ஆனால் அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே நான் காயப்பட்டுள்ளேன் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்கள் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்

ad

ad