வெள்ளி, அக்டோபர் 30, 2015

அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளர் கொலை! காட்டுக்குள் விருந்து வைத்துக் கொண்டாடிய கொலையாளிகள்


அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளரின் கொலையை அடுத்து, அருகேயிருந்த காட்டுப் பிரதேசத்தில் கொலையாளிகள் விருந்து வைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் சிராவஸ்திபுர தேக்குமரக் காட்டுப் பகுதியில் இந்த விருந்து வைபவம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து கொலையாளிகள் கொலைக்குப் பயன்படுத்திய கோடரி, தடிகள் மற்றும் இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பவற்றை தீயிட்டு எரித்துள்ளனர். பின்னர் கோடரியின் இரும்பு பாகம் மண்ணிற்குள் புதைக்கப்பட்டுள்ளது.
தற்போது பொலிசார் இந்தக் கோடரியைக் கண்டுபிடித்துக் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் நைட் கிளப் உரிமையாளர் வசந்த சொய்சாவின் கொலை பற்றி முன்னதாகவே தகவல்களை அறிந்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.