புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2015

கனேடிய புதிய பிரதமர் மீதான தமிழர்களின் நம்பிக்கை - இந்திய பாங்க்ரா நடனம் ஆடி அசத்தினார்



கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள ஜஸ்டின் டிரடியூ, தமிழ் மக்களுடன் நெருக்கமான பயணிக்க கூடியவர் என கனேடிய தமிழ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த கனேடிய தேர்தலில் லிபரல் கட்சி பாரிய வெற்றியை பெற்றது.  அந்த கட்சி 184 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்த கட்சியின் சார்பில் கனடாவின் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஜஸ்டின் டிரடியூ தமிழ் மக்களின் கலை, கலாசார நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
இவர் பிரதமர் பதவிக்கு வந்துள்ளதால், தமிழர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் வாழும் தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவுகளை பேணி வரும் ஜஸ்டின், ஈழத்தில் தமிழர்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுவார் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
லிபரல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்காப்ரோ ரூஜ் ரிவர் தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார்.
எனினும் புதிதாக பிரதமராக பதவியேற்க உள்ள ஜஸ்டின் டிரடியூ தமிழ் மக்களுடன் இணைந்து சென்று, தமிழ் சமூகத்திற்கு நன்மைகளை செய்ய ஆர்வம் கொண்டிருந்தாலும் ஆனந்தசங்கரி போன்ற தமிழர்கள் அதனை மேற்கொள்ள தம்மால் ஆன சிறப்பான ஒத்துழைப்புகளை வழங்குவார்களா என்ற சந்தேகம் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
உயர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்படும் தமிழர்கள் சுயநல போக்குடையவர்களாக இருந்து வந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய பாங்க்ரா நடனம் ஆடி அசத்தும் கனேடிய பிரதமர் Justin Trudeau
கனடாவில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ள லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau இந்தியாவின் பிரபல பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பாங்க்ரா நடனம் அடுவத போன்று வெளியான வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவிவருகின்றது.
இந்த வீடியோ பதிவில் பாங்க்ரா நடனக் கலைஞர்களுக்கே சவால் விடுவது போன்று Justin Trudeau நடனமாடுவது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக அமைந்துள்ளது.
கனடா மொன்றியலில் அமைந்துள்ள இந்திய கனேடிய அசோஷியேசனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே Justin Trudeau இவ்வாறு நடனமாடி அசத்தியுள்ளார்.
கனடாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சியின் தலைவரான Justin Trudeau தேர்தல் பரப்புரைகளில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முன்னின்று செயற்படுகின்றார்.
இதற்கிடையில் மக்களுடன் ஒருவராக இணைந்து இவ்வாறான மகிழ்ச்சியான தருணங்களையும் ஏற்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
ஹரி ஆனந்தசங்கரி இணை அமைச்சரராகலாம் - இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாக சந்தர்ப்பம் இருந்ததது!
கனடாவின் பிரதமர், தாங்கள் ஈராக்கில் விமானத் தாக்குதல்களை நிறுத்தப் போகின்றோம் என்பதை ஒபாமாவிற்குச் சொல்லவிட்டார். புதிய வெளியுறவுக் கொள்கைகளை தொடர்பாக உலகம் அவரை ஆவலுடன் பார்த்திருக்கிறது.
தெரிவு செய்யப்பட்ட லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பல நிபுணத்துவ மேதைகள் இருக்கின்றார்கள்.

ad

ad