புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2015

பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும்:விக்னேஸ்வரன்

நாட்டில் கல்வி பயின்று பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதனை சட்டமாக்குதல் தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். யாழிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இன்று  இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் காணரமாக எமது உறவுகள் தமது உடமைகளையும், அவையங்களையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் படித்து பட்டம் பெற்றதன் பின்னர். அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்கின்றனர்.
இவர்களிடம் நான் இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். பட்டம் பெற்றதன் பின்னர் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும். மேலும், இதனை சட்டமாக்குதல் தொடர்பில் தற்போது ஆலோசித்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ad

ad