புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

ஐ.நாவின் குற்றச்சாட்டை மறுக்கும் கருணா


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் தம்மீது நேரடியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை, முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார்.
போர்க்குற்ற அறிக்கையில் கருணா குழு, சிறுவர்களை படைக்கு சேர்த்தது என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இதனை மறுத்துள்ள கருணா, தாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த பின்னர் இந்தியாவுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து நாடு திரும்பிய பின்னர் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தாம் சிறுவர்களை படைகளுக்கு சேர்ந்த துணை இராணுவக்குழுவாக செயற்படவில்லை என்றும் அவர் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ad

ad