புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

நடிகர் சங்கம் பெயர் மாற்றம் ; ரஜினி - கமல் இடையே கருத்து பிளவு

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பெயரை மாற்றுவது தொடர்பாக ரஜினியும், கமலும் மாறுப்பட்ட கருத்தை
தெரிவித்துள்ளனர். இது குறித்து தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.



நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை வாக்களிக்க வந்த ரஜினி கூறிய கருத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது நடிகர் சங்கத்தேர்தல் சூடுபிடித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து வலுபெற்று வருகிறது.


தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற வேண்டும் - ரஜினி



இந்நிலையில் காலையில் வாக்களிக்க வந்த ரஜினி, தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள் முதல் வேலையாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரஜினி சொன்ன கருத்துக்கு பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்த அதேநேரம், தமிழரல்லாதவர்... தெலுங்குக்காரர் என்று விமர்சிக்கப்படும் விஷாலுக்கு எதிராக ரஜினி கருத்து சொன்னதாக விஷால் அணியினர் அப்செட்டாகினர்.



ரஜினி கருத்து - நடிகர்கள் வரவேற்பு



சரத்குமார்: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும். ரஜினி பெயரை மாற்ற கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட விஷால் அணியினர் ஆதரிக்கவில்லை.



ராதாரவி : நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவது குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும். சங்கத்தின் பெயர் மாற்றப்படுமா அல்லது புதிய அமைப்பாக செயல்படுமா என பின்னர் முடிவு செய்யப்படும். உறுப்பினர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு ஓட்டளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



விஷால் அணியினர் அப்செட்.?



ரஜினி சொன்ன கருத்துக்கு பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்த அதேநேரம், தமிழரல்லாதவர்... தெலுங்குக்காரர் என்று விமர்சிக்கப்படும் விஷாலுக்கு எதிராக ரஜினி கருத்து சொன்னதாக விஷால் அணியினர் அப்செட்டாகினர் என்று கூறப்படுகிறது.



இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும் - கமல்



தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகை கவுதமியுடன் வந்து நடிகர் கமல்ஹாசன் ஓட்டளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பல பெரியவர்கள் ஆசையுடன் ஏற்படுத்திய சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம். தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். தேர்தலுக்கு பிறகு அனைவரும் ஒன்று சேர வேண்டும். யார் தரப்பில் இருந்தாலும் தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.



கொம்பு சீவி விடப்பட்டாரா கமல்.?



ரஜினியின் தமிழ்நாடு நடிகர் சங்கமாக வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார் கமல். ரஜினியின் கருத்துக்கு எதிராக கமலை, விஷால் அணியினர் கொம்பு சீவி விட்டுவிட்டதாக நடுநிலையான நடிகர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.



பெயர் மாற்றம் சாத்தியமா...?



தென்னிந்திய சினிமாவின் மையமாக சென்னைதான் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது. 1980களுக்குப் பிறகுதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரையுலகங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன. நடிகர் சங்கம் என்ற ஒன்று ஆரம்பமான போது அதில் தென்னிந்திய மொழிக் கலைஞர்கள் அனைவரும் இடம் பெறும் வகையில்தான் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்று உருவானது.



இப்போது அந்தப் பெயரை மாற்றுவது சரியாக இருக்குமா என்ற விவாதம் ரஜினிகாந்த் பேசிய பிறகு இன்னும் அதிகமாகிவிட்டது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயராக இருக்கிறது. அது அழிக்கப்பட்டு விடுமா, அல்லது மொழியை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாகுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

ad

ad