புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

விடுதலைப் புலிகளின் உருவாக்கத்துக்கு தென்னிலங்கை தலைவர்களே காரணம்: சம்பந்தன்- குற்றச்சாட்டை ஏற்றது அரசாங்கம்


இலங்கையில் விடுதலைப் புலிகள் உருவாவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளே காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரா. சம்பந்தன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
இலங்கையில் உள்ளகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமை காரணமாகவே அவற்றை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
1961ஆம் ஆண்டு வடக்குகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக் கிரகத்தின் போது தாம் உட்பட்ட தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும் அந்த பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வுக்காணப்பட்டது.
இந்தநிலையில் பண்டா செல்வா உடன்படிக்கை மற்றும் பண்டா டட்லி உடன்படிக்கை என்பன இந்தியாவிலும், வோசிங்டனிலும் கைச்சாத்திடப்படவில்லை.
இலங்கையிலேயே கைச்சாத்திடப்பட்டது.
இந்தநிலையில் பிரச்சினை தீர்வுக்காக சர்வதேசத்துக்கு செல்ல வேண்டாம் என்ற ஜேவிபியின் தலைவரின் கூற்றை தாம் ஏற்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்களை பொறுத்தவரையில் பிளவுப்படாத, ஐக்கிய இலங்கைக்குள், ஒருமைப்பாடு, இறைமைக்கு உட்பட்ட வகையில் தீர்வு காணப்படுவதையே விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
புலிகளின் உருவாக்கத்துக்கு சிங்கள தலைவர்களே காரணம்! குற்றச்சாட்டை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது
தென்னிலங்கை தலைவர்கள் மற்றும் கட்சிகள் ஜனநாயக ரீதியாக தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமையே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான காரணம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது விடுதலைப்புலிகளின் உருவாக்கத்துக்கு இதுவே காரணம் என்று குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் தமிழ் தலைவர்கள் தனிநாட்டைக்கோரவில்லை. மொழிப் பிரச்சினையையே முன்வைத்தனர்.
எனினும் இந்த மொழிப்பிரச்சினை தீர்க்கப்படாமை காரணமாகவே தமிழீழ கோரிக்கை வலுப்பெற்றது என்று கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஜனநாயக தமிழ் தலைவர்களுடன் பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியேற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad