புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

அன்பழகன் முன்னிலையில் மல்லு கட்டிய திமுகவினர்!

க்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், நாம் சரியாக இல்லை என்ற திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசனின் பேச்சுக்கு, மக்களும் சரியாக இல்லை, நாமும் சரியாக இல்லை என்று அன்பழகன்  பதிலடி கொடுத்து பேசியது தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தஞ்சை மாநகர திமுக சார்பில் முப்பெரும்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர்
அன்பழகன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, முன்னாள் எம்எல்ஏக்கள் மகேஷ் கிருஷ்ணசாமி, எம்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் குத்தாலம் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆனால், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மட்டும் மிஸ்சிங். 

கூட்டம் தொடங்கியதும் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் குத்தாலம் அன்பழகன் பேசுகையில், " பேராசிரியர் அன்பழகன் பொதுக்குழுவில் பேசும்போது, ' நாம் சரியாக இருக்கும்போது மக்கள் சரியாக இல்லை. மக்கள் சரியாக இருக்கும்போது நாம் சரியாக இல்லை' என்றார். அது இப்போது எனக்கு ஞாபகம் வந்ததுவிட்டது" என்று பேசி திமுகவில் நிலவும் கோஷ்டி பூசலை ஒழிக்க வேண்டும் என்று தூபம் போட்டார்.

அடுத்து வந்த எல்.கணேசன் பேசுகையில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் டெல்டா விவசாயிகளுக்கு செய்த திட்டங்களையெல்லாம் பட்டியலிட்டு பேசிவிட்டு, இறுதியில், "மக்களை பார்க்கும்போது சரியாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் சரியாக இல்லை, கோஷ்டிகள் ஒழிய வேண்டும்" என்று சொல்லி திமுகவினரை மட்டுமல்ல பேராசிரியரையும் அதிர வைத்தார்.

அடுத்து பேசிய பேராசிரியரோ, திமுகவினருக்கு அறிவுரை சொல்லி பேச்சை தொடர்ந்தார்.
"மக்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் சரியில்லை என்று சொல்லுகிறீர்கள். அது தவறான கருத்து.  நான்கரை ஆண்டுகளாக யாரிடமோ ஆட்சியை கொடுத்துவிட்டு நாம்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் எங்கே என்று கேட்டால் கொடநாட்டில் இருக்கிறார் என்றுதான் சொல்லுவார்கள் மக்கள். பால்விலை திமுக ஆட்சியில் ரூ.17, அதிமுக ஆட்சியில் ரூ.44, சீனி ரூ.26, இன்று ரூ.35, பொன்னி அரிசி ரூ.26, இன்று ரூ.50, பருப்பு திமுக ஆட்சியில் ரூ.62, அதிமுக ஆட்சியில் ரூ.218 என்று விற்கும்போது மக்கள் எப்படி நன்றாக இருக்க முடியும்.

கள்ள மார்க்கெட்டில் பதுக்கி வைத்திருக்கின்ற பருப்பை வெளியில் கொண்டுவந்தால் பருப்பு விலை குறையும். அதை செய்வாரா முதல்வர்? பருப்பு இவ்வளவு விலை விற்கும்போது மக்கள் எப்படி நன்றாக இருக்க முடியும். கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், மல்லி, கடலை எண்ணெய், சிமெண்ட் என எல்லாமே திமுக ஆட்சியில் விலை குறைவாகத்தான் இருந்தது. அதிமுக ஆட்சியில்தான் எகிறிப்போய் கிடக்கிறது.

விலைவாசி உயர்வால் மட்டுமல்ல சட்டம், ஒழுங்கு பிரச்னையால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சென்னை காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில் கொள்ளை, அடையாறில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு, காசிமேட்டில் ஒரு பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு, மதுரையில் 38 பவுன் கொள்ளை, திருப்பூரில் சிறுவனை கொலை செய்துவிட்டு தாயிடம் உள்ள நகைகள் கொள்ளை, திருவான்மியூரில் 8 பவுன் கொள்ளை இது அனைத்தும் ஒரே நாளில் நடைபெற்ற சம்பவங்கள். இப்படி ஒரே நாளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றால் எப்படி மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். ஆகவே மக்களும் சரியாக இல்லை, நாமும் சரியாக இல்லை என்று சொன்னவர், இதற்கெல்லாம் ஒரே வழி யாருக்கு ஓட்டு போட்டால் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள்" என்றார்.

மக்கள் சரியாக இல்லையென்றும், நாமும் சரியாக இல்லையென்றும் அன்பழகன் பேசியிருப்பது, கோஷ்டி பூசலால் திளைத்து நிற்கும் திமுகவினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

ad

ad