புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2015

இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்.

இலங்கையில் இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.


இன்றைய தினம் வலி.வடக்கு ஒட்டகப்புலம் பகுதிக்குச் சென்ற வேளை மக்கள் அவரை வரவேற்று கௌரவித்தனர்.அதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வலி.வடக்கில் உள்ள காணிகளை (ஒட்டகப்புலம); முழுமையாக சுவீகரிக்கும் நோக்கிலே கடந்த கால ஆட்சியாளர்கள் முயன்றார்கள்.மீளக் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை.
அதுமட்டுமல்ல கடந்த கால ஆட்சியாளர்கள் காணிகளை மக்களிடமே மீளஒப்படைப்பதாக உயர்நீதிமன்றத்திலும்,பல இடங்களிலும் வாக்குறுதிகளை அளித்திருந்த போதிலும் அதனை நிறைவேற்றும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை.
வலி.வடக்கிலுள்ள முழுக்காணிகளையும் சுவீகரிக்கும் நடவடிக்கையில் பல அழிவுகளை ஏற்படுத்தி தாங்கள் விரும்பிய கட்டடங்களை நிர்மாணித்தும், முட்கம்பிகளால் வேலிகளை அமைத்தும் இருக்கின்றனர்.
பாரிய ஆட்சி மாற்றம் ஒன்று தைமாதத்திற்கு பின்னர் ஏற்பட்டது.அதன் காரணமான நிமித்தம் வடக்கில் வலிகாமம், கிழக்கில் சம்பூர் போன்ற பகுதிகளில் மக்கள் குடியேறும் கருமங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சில காணிகள் மக்களிடம் மீளஒப்படைக்கப்பட்டன.
எனினும் வலிகாமத்தில் அதிகளவான காணிகள் இராணுவ வசமே உள்ளது.இன்னமும்  விடுவிக்கப்படவில்லை.
பல கோரிக்கைகளை புதிய அரசாங்கத்திற்கு நாங்கள் முன்வைத்துள்ளோம்.அதாவது,இராணுவ மயமாக்கல் குறைக்கப்பட வேண்டும்,மக்கள் சொந்த நிலங்களில் மீளக்குடியமரவேண்டும்,காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும், தடுப்பில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், முக்கியமாக இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன் பல்வேறு அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றோம்.
மேலும் இவ்வாறான பிரச்சினைகளை ஜனாதிபதி,பிரதமரையும் நான் சந்தித்து திடமாக பேசி வெகுவிரைவில் இதற்கான தீர்வை எட்டி அதனை நடைமுறைப்படுத்துவோம்.
எனவே மக்கள் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும் மக்களின் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும் என்றார்.

ad

ad